வளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது
நம்மைச் சுற்றி கடனும்
என்னைச் சுற்றி கடலும் இல்லாவிட்டால்
நடந்தே ஊர் வருவேன்
கேட்பதை எல்லாம் கொடுப்பவன் அல்ல இறைவன்
தேவையானதை கொடுப்பவனே இறைவன்
கேட்பதை எல்லாம் கொடுப்பவன் அல்ல இறைவன்
தேவையானதை கொடுப்பவனே இறைவன்
எதிர்பார்ப்பு இல்லாத அன்பே ஜெயிக்கும்
ஆகக் குறைந்த்தது ஒரு லைக்காவது
புத்திசாலித்தனம் என்பது ஜட்டி மாதிரி
யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது
யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது
வில்லன் கதாநாயகனை துப்பாக்கியால் சுடுகிறான், குண்டு வருகிறது,
கதாநாயகன் குனிந்து மறைந்து தப்பினால் அது யாதர்த்த சினிமா
வருகிற குண்டை பல்லால் கடித்து துப்பினால் அது கமர்ஷியல் சினிமா
கதாநாயகன் குனிந்து மறைந்து தப்பினால் அது யாதர்த்த சினிமா
வருகிற குண்டை பல்லால் கடித்து துப்பினால் அது கமர்ஷியல் சினிமா
ஆயிரம் யானைகள் ஒரு காட்டில் இருந்தாலும் அந்தக் காட்டிற்கு எந்த சேதாரமும் ஏற்படாது - ஆனால் நாலு மனிதர்கள் காட்டின் ஓரம் குடியேறினால்...............!
ஒரு காட்டினால் ஆயிரம் யானைகளுக்கு அவைகளின் ஆயுள் முழுக்க உணவளிக்க முடியும், மனிதார்களினால்................!
ஒரு காட்டினால் ஆயிரம் யானைகளுக்கு அவைகளின் ஆயுள் முழுக்க உணவளிக்க முடியும், மனிதார்களினால்................!
கல்யாண வீடோ கருமாதி வீடோ ஊரே கூடி நின்னாலும் மனம் என்னாவோ விருப்பத்துக்குரியவர் வந்தாரா, வாழ்த்தோ ஆறுதலோ சொன்னாரா என்றுதான் தேடுகிறது
என்ன மனப் பாங்கு எனப் புரியவில்லை
என்ன மனப் பாங்கு எனப் புரியவில்லை
நான் அதுவாக இல்லவே இல்லை என்று நிருபிப்பதை விட நான் இதுவேதான் என்று புரிய வைப்பது இலகுவானது
தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்
என் முகப்பக்கங்களிருந்து
நல்ல நல்ல ஜிந்தனைகள் :) அதுவும் யானைகள் /மனிதர்கள் அப்பட்டமான உண்மை
ReplyDeleteநன்றி சகோ, வரவிற்கும் கருத்திற்கும்
Delete
ReplyDeleteதன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்//
சத்தியமான உண்மை மக்கா...இதை மதம் பிடித்த மனிதர்கள் உணர்ந்து கொண்டால் எல்லாம் நலம் சூப்பர்ப்...!
நன்றி அண்ணே
Deleteவளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது
ReplyDeleteநம்மைச் சுற்றி கடனும்
என்னைச் சுற்றி கடலும் இல்லாவிட்டால்
நடந்தே ஊர் வருவேன் //////அதுக்காக ஆர்வக்கோளாறில் நடந்தோ பறந்தோ வரவேணாம் ,கடனையெல்லாம் அடச்சிட்டு வரவும். இங்கே வந்து மனைவியின் நிம்மதியும் பறிபோகும்?அப்படின்னு சொல்ல நினைத்தேன் ......ஆனாலும் கண்கள் பனித்தன தம்பி..அருமை!
நன்றி அக்கா, சில நேரம் நம்மையும் மீறி விடும் கவலைகள்
Deleteமுதல் கவிதை அருமை நண்பா! சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் பணிபுரியும் அனைவருக்கும் இது பிடிக்கும்! :)
ReplyDeleteநன்றி நண்பா, நாங்களாவது பரவாயில்லை, அடிக்கிற வெயிலில் பாதை திருத்த வேலை கட்டிட வேலைகள் செய்வோரைப் பார்க்கும் போது முடியல
Deleteஒண்ணும் தெரியாதவன்... ரொம்ப ஜிந்திக்கபடாது
ReplyDelete...ஹாங்
மன்னிச்சிகோங்க எசமான், தெரியாம மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்துட்டேன்
Deleteமிகச்சிறந்த பதிவராக முத்திரை பதிக்க இருக்கும் அண்ணன் இல்யாஸ் வாழ்க...
ReplyDeleteஎத்தன நாளா கங்ககணம் கட்டிட்டு இருந்தே நண்பா
Deleteஎனக்கு பிடித்தது இந்த ரெண்டும் தான்.......
ReplyDelete//தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்
புத்திசாலித்தனம் என்பது ஜட்டி மாதிரி
யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது
செம (ஜி)சிந்தனை... தொடர்ந்து ஜிந்திக்கவும்...
நன்றி நண்பரே வரவிற்கும் கருத்துக்கும்
Delete