Sunday, October 26, 2014

 12:45 PM      27 comments

எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை  துணை நிற்க .....!நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா படத்துல வருகிற ரெண்டு நாயககர்களும் அப்படித்தான் இருக்காங்க, உருவத்திலையும் சரி பாத்திரப் படைப்பிலும் சரி. ஆனாலும் இயக்குனர் நாயகர்கள் ரெண்டு பேர்லயும் இருக்குற தனிப்பட்ட கோவத்தை வைத்து இப்படி பழிவாங்கி  இருக்க வேணாம்ன்னு நம்ம விமர்சனக் குழு கருதுது. பின்ன என்னங்க எட்டு நிமிசப் படத்துல ரெண்டு நாயகர்ளையும் அஞ்சு  நிமிசத்துக்கு மேல வெயில்ல நடக்க விட்டு வாட்டி வதக்கி இருக்காரு. அதிலயும், நாயகன் ஆவிக்கு அவர் ஒரு டச்சப் பாய் கூட வைத்துக் கொடாமல் வியர்க்க விறுவிறுக்க நடிக்க விட்டதை பார்க்கும் போது இயக்குனர் மேல் கண்டனக் கூட்டம் போட்டு கண்டிக்க நினைத்தாலும், ஆவி கெட்ட கேட்டுக்கு இது போதும் என்கிற இயக்குனரின் மைன்ட்வாயிஸ் நமக்கும் கேட்பதால் மன்னித்து விடுகிறோம். இணை நாயகன் அரசன் ஸ்ட்ரைட்டா கதாநாயகன் என்கின்ற ரேஞ்சில் இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடி இருக்குறார் என்பதை படத்தில் இயக்குனர் ஒஞ்சி  நிற்பது  காட்டிக் கொடுக்கிறது.இதையெல்லாம் விட்டுவிட்டு போகலாம் என்றால், இன்றைக்கு குறுந்திரை நாயகன், நாளை வெள்ளித்திரை நாயகன், அப்புறம் ரசிகர் மன்றம், பிக்காளி சூப்பர்ஸ்டார், சுண்ணாம்பு திலகம் அப்புறம் தமிழ்நாட்டின் தலைவிதிக்கு ஏற்ப முதல்வர் கனவு என்று நாயகர்கள் இருவரும் மனப் பால் குடித்தது கடைவாய் வழியே வழிந்திருப்பது காட்டிக் கொடுக்கிறது. இதுக்கும் நாம்தான் விமர்சனம் எழுதணும் போஸ்டர் ஓட்டனும் என்கிற கொடுமையை நினைக்கும் போது தான் தாங்க முடியல.


ஜோக் ஒப் த பார்ட்டை இத்துடன் நிறுத்திவிட்டு..................!
இயக்குனராக பரிணாமம் எடுத்திருக்கும் நண்பர் குடந்தை ஆர். வி. சரவணனுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். முதல் முயற்சி போலில்லாமல் தேர்ந்த ஒரு திறமை படத்தில் தெரிகிறது. முதல் படமே வெளிக்களத்தில். காட்சிகளில் வழிப்போக்கர்கள் உட்பட எல்லோரும் இயல்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டதில் அவரின் நெறியாள்கை தெரிகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத கதை தேவையான இடத்தில் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள். வாழ்த்த தோணவில்லை, கற்றுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கதைக்கு ஏற்றமாதிரி நாயகர்கள்,   பாத்திரத்துடன் ஒன்றிப் போன மாதிரி ஒரு உருவ மைப்பு ரெண்டு பேருக்கும்.


அரசன், நம்மை தினசரி கடந்து செல்லும் சாதாரண இளைஞ்சனின் உருவம், குறும்படம் என்று ஏனோ தானோ என்றில்லாமல் பாத்திரத்துடன் ஒன்றித்துப் போனது போன்று இருந்தது. வசனங்களில் சரியான தெளிவு. ஆவி, மத்தியதர மனிதனின் தோற்றம் அவரின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது. வசன உச்சரிப்புக்களில், நடிப்பில் அரசனுக்கு சரியான போட்டி. 
வாழ்த்துக்கள் நண்பர்களே, இதுபோன்று புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

27 comments:

 1. அருமை! கண்டேன்! களி மிக கொண்டேன்! குடந்தை, ஆவி அரசன் ஆகிய மூவருக்கும் காணத் தந்த உங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா, வரவிற்கும் கருத்திற்கும்

   Delete
 2. படத்தின் இறுதியில் அரசன் மற்றும் ஆவி மனதில் நண்பனை காணவில்லையே என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதை இயக்குனர் அவர்களின் முக பாவனைகளில் கொண்டு வந்துள்ளார்...

  ReplyDelete
  Replies
  1. தமிழ் வாசி அண்ணே நன்றி

   Delete
  2. பிரகாஷ், ரொம்ப நன்றி..!

   Delete
 3. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கும் ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம் மனோ அண்ணே..! அரசன் பீல் பண்ணிட்டாரு பாருங்க..! :)

   Delete
 4. இரண்டு விதமான விமர்சனமா..
  நல்லது
  படத்தை இனிமேதான் பார்க்கப்போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே

   Delete
 5. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தலைப்பு கொஞ்சம் கவித்துவமாக இருப்பதால் அதிகம் எதிர்பார்க்கப் பட்டது. நன்றாகவே இருந்தது. சரவணன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை துணை நிற்க // ரொம்ப பயங்கரமான தேவதையா ?

  ReplyDelete
 8. பின்ன என்னங்க எட்டு நிமிசப் படத்துல ரெண்டு நாயகளையும் // அண்ணே இருந்தாலும் எங்களை நாய் என்று திட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆமா நாய் கோச்சுக்கும்..!

   Delete
 9. //இணை நாயகன் அரசன் ஸ்ட்ரைட்டா கதாநாயகன் என்கின்ற ரேஞ்சில் இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடி இருக்குறார் என்பதை படத்தில் இயக்குனர் ஒஞ்சி நிற்பது காட்டிக் கொடுக்கிறது.//

  ரைட்டு ரைட்டு

  ReplyDelete
 10. கனவு என்று நாயகர்கள் இருவரும் மனப் பால் குடித்தது கடைவாய் வழியே வழிந்திருப்பது காட்டிக் கொடுக்கிறது//

  கவிதை கவிதை

  ReplyDelete
 11. நடிப்பில் அரசனுக்கு சரியான போட்டி. // ஆவிக்கு நான் போட்டியா ? இது கோத்து விடுற மாதிரி இருக்கு ப்ரோ ,...

  ReplyDelete
  Replies
  1. அரசன் மாதிரி ஒரு சிறந்த நடிகர் கூட என்னை ஒப்பிடலாமா.. இப்ப கோபப்படறார் பாருங்க..! ;)

   Delete
 12. முதல் விமர்சனம் எழுதி, மனதில் தோன்றியதை மறைக்காமல் சொன்ன உங்களுக்கு சில நொடி சிநேகம் குழுவினரின் சார்பாக மிகுந்த நன்றிகள் அண்ணே

  ReplyDelete
 13. நண்பா.. நீங்க விமர்சனம் போட்டதுமே படிச்சுட்டேன். எங்க டைரக்டருக்கும் காண்பித்தேன். அப்போ மொபைலில் படித்ததால் கமென்ட் போட முடியாமல் போய்விட்டது. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..!


  சரி மேட்டருக்கு வருவோம். நீங்க முதல் பாதியில 'மனம் திறந்து' பாராட்டியிருந்ததை ரசித்தேன். நீங்க மட்டும் விமர்சனம் எழுத வந்தீங்கன்னா தமிழ்நாடே ஆடிடும்..! தமிழ்த் திரையுலகமே திரும்பிப் பார்க்கும்..! பல இளைஞர்கள் உங்களை ஒரு 'எடுத்துக் காட்டா' பார்ப்பாங்க.. அவ்வளவு பவர்புல் உங்க எழுத்துக்கள்..

  ஒக்கே, ஜோக்ஸ் அபார்ட்.. குறும்படம் என்றதும் குதிச்சுகிட்டே போனோம் நாங்க ரெண்டு பேரும். ஆனா திரையில் ஏழு நிமிடம் ஓடும் அந்த படத்துக்குக்காக எவ்வளவு மெனக்கெட்டோம் என்று எங்க குழுவுக்கு மட்டும் தான் தெரியும். அவுட்டோர் ஷூட்டிங்கை அருமையா சமாளிச்சு எடுத்த பெருமை, ஆர்டிஸ்ட், டெக்னிஷியன்களை வேலைவாங்கியது என எல்லா பெருமையும் டைரக்டரையே சாரும்..! (இது நிச்சயம் அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து புகழ்ந்தது அல்ல! ;) )

  உங்க வாழ்த்துக்கு நன்றி இலியாரே..!

  ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

நானும் ரவுடிதான்

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

ச்சும்மா வரலாம்.. வாங்க!

Powered by Blogger.

மெயில்ல வேற வேணுமாக்கும்

இங்கிருந்து படிக்கறாங்க!!!!