மந்திரவாதிகளின் வாக்கு சாதூரியத்தால் நாம் எப்படி மயங்குகிறோம் என்று இந்த தொடரின் 01ம் பாகத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்குறேன். சில வேளைகளில் நம்மை நம் வாயாலேயே சிக்கலில் மாட்டியும் விடுவார்கள். நம் வீட்டில் உள்ள பொருள், உதாரணமாக தங்கநகை வீட்டில் ஓரிடத்தில் வைத்து விடுவோம். அதுவும் தொலைந்தும் விடும், அந்த நேரம் வீட்டுக்கு வந்த ஒருவரை சந்தேகம் வேறு படுவோம். இருந்தாலும் நாகரீகம் கருதி அவரிடம் கேட்க மாட்டோம். இந்த நேரத்தில் நமக்கு மந்திரவாதியிடம் சென்று குறி சாத்திரம் பார்க்கும் படி ஏற்கனவே மந்திரவாதியிடம் ஏமாந்த ஒருவர் நம்மை உசுப்பேத்தி விடுவார். நாமும் அவரின் ஆலோசனைப் படி மந்திர வாதியிடம் செல்வோம்.
அங்கு போனதும் தான் நமக்கு ஏழரை ஆரம்பிக்கும். எல்லா சடங்கும்(?) முடிந்தபின் சொல்லுவான் தீர்ப்பு நம் குடும்பமே கலங்குகின்ற மாதிரி. "ஒரு ஆள் தான் எடுத்து இருக்கு, ஆனா அதை சொல்லுவதால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பம் வந்து விடும் என்று பயபடுகிறேன்" என்று. நாமும் விட மாட்டோம். யாரென்று சொல்லுங்க என்று மன்றாடுவோம். அவனும் ரொம்ப பிகு பண்ணிய பிறகு, நம்மிடம் பிரச்சனை படக்கூடாது அது இது என்று சத்தியமெல்லாம் வாங்கி விட்டு வரலாற்று சிறப்பு மிக்க உண்மையை சொல்லுவான். "நீங்கள் மனதில் யாரை நினைத்து இருக்குறீர்களோ அவர்தான்" என்று. நாம் அதற்கு முன்பே சொல்லியிருப்போம் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருக்கு என்று. அதை வைத்து சரியா பயபுள்ள நம்மை கோர்த்து விடுவான். அதை நாம் நம்பி ஒரு அப்பாவியை பிடித்து வைத்து குமுறுவோம். வீட்டினுள் வந்து போனவன் சொந்தக்காரனாக வேறு இருந்து விட்டால், குடும்பங்கள் பிரிவதும் உண்டு.
உண்மையில் மேலே உள்ள சம்பவத்தில் மந்திரவாதி செய்தது என்ன? நம்மிடம் போட்டுவாங்கி அவன் வாயால் சொல்லுவான், அதுவும் சர்வ ஜாக்கிரதையாக. நாம் அந்த அப்பாவியை அடித்து பிரச்சனை ஏதும் வந்தால், மந்திரவாதி தப்பி விடுவான். அவன்தான் யார் பெயரையும் சொல்லவில்லையே. சிலவேளை நாம் யாரையும் சந்தேகப் படவில்லை என்று அவன் கண்டு கொண்டால், அப்பவும் நமக்கு அல்வா தான். "உங்கள் வீட்டினில் சதுரமான இடத்தில் தான் அது இருக்கு. மூன்று நாளைக்குள் கிடைத்தால் உங்களுக்கு. இல்லை என்றால் கிடைக்காது" என்று சொல்லி விடுவான். நம் வீடு காணி எந்த இடமும் சதுரம் தான் என்பது நம் மரமண்டைக்கு அப்போது புரியவே புரியாது. வீட்டினில் வட்டமான ஒரு பானைக்குள் அந்த நகை கண்டுபிடிக்கப் பட்டாலும், அந்த பானை இருந்த இடம் சதுரமான அறை என்று அவன் சமாளிப்பான். பின்னே என்ன, நகை கிடைக்குதோ இல்லையோ, நகையின் பெறுமதியில் அரைவாசியை தட்சணையாக கொடுத்து விட்டு வீர நடை போட்டு வருவோம்.
முக்கியமாக இதில் ஒரு விடயம், நாம் மந்திரவாதியிடம் போனதும் சடங்கு(?) என்னும் போர்வையில் நமக்கு மூளைச்சலவை செய்வான். முதலில் பழம் ஒன்றின் பெயரை நினையுங்க என்பான் நாமும் நினைப்போம். சரியாக நாம் நினைத்த பழத்தின் பெயரை சொல்லுவான், பின் ஒரு பூவின் பெயரை நினைக்க சொல்லுவான். நாமும் நினைப்போம். அதையும் சரியாக சொல்லுவான். இது எப்படி செய்கிறான? . பழம் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, மாம்பழம் அல்லது அப்பிள்தான். பூ என்றால் மல்லிகை அல்லது செம்பருத்தி தான். மற்றது அவன் இருக்கும் இடத்தின் அனுமாஷ்யமும், அவன் செய்கைகளில் நாம் கொண்ட பயபக்தியும், அவனின் பயமுறுத்தும் நடவடிக்கைகளும் நம்மை சிந்திக்க விடாது. பழம் என்றால் செர்ரி என்றோ பூ என்றால் தேங்காய்ப்பூ என்றோ சொல்ல நமக்கு தோன்றாது. இது எல்லாவற்றுக்கும் மேலாக டெலிபதி என்னும் கலையும் இங்கு அவனால் பாவிக்கப் படும். அவன் என்ன நினைக்கிறானோ அதையே நம்மையும் நினைக்க தூண்டி விடுவான். அப்புறம் என்ன? நாம் நினைத்ததை அவன் சொல்லி விட்டால், காலம் முழுக்க நாம் அவன் காலடியில் தான்.
-இன்னும் வரும்
விழிப்புணர்வூட்டும் தொடர்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஜோசியக்காரனின் நிலையம் இதுதான், மும்பையில் கிளி ஜோசியம் சொல்ல வந்தவனை பிடிச்சு வச்சு, செத்தவன் ஒருத்தன் பேரை சொல்லி எதிகாலம் பற்றி கேட்க, கிளி புலியுடன் ஐயப்பன் படம் எடுத்து போட...
ReplyDeleteவிட்டான் பாருங்க பீலா பாரத பொரதமர் ரேஞ்சிக்கு எதிர்காலம் சொன்னான், அப்புறம் என்ன ? செவில் டரியல் ஆகி வெளியே போனான்.
அடுத்தவனுக்கு கோடிஸ்வரன் ரேஞ்சுக்கு ஜோசியம் சொல்லுறவன் அடுத்த வேளை சோத்துக்கு நாயா அலைவான், மூதேவி அவனுக்கு ஒரு ஜோசியம் பார்த்து நல்லா வர வேணுன்னு நினைக்கவே மாட்டான்
Delete