மதங்களின் சாத்வீகமும்
மனித நற்பண்புகளும்
கழுத்து நெரிக்கப் பட்டு
பிணங்களோடு பிணங்களாக
அடுக்கப் படுகின்றன
ஒன்றாக...!
ஏற்றப் பட்ட வெள்ளைக்கொடி
இறக்கப்பட்டு கிழிக்கப்பட்டு
போர்த்துகின்றன அவற்றை
பறக்கவிடப் பட வேண்டிய
சமாதனப் புறா
சட்டியில் கொதிக்கிறது
இழவுவீட்டு விருந்தாக...!!
எண்ணிக்கையும் போதாது
எண்ணியதும் தேறாது
என்றதும் பொங்கினர்
கொன்று போட்ட
மதத்தையும் மனிதத்தையும்
கூறுபோட்டு விற்க...!!!
எண்ணியதுவும் வேண்டியதுவும்
எல்லையின்றி கிடைத்ததுவும்
கோர முகத்தை மறைக்க
மத இன முகமூடி மீண்டும்
சாத்தான்கள் வேதத்தை
தூசு தட்டுகின்றன
நம்பிய பாமரன் மட்டும்
இன்னும் பிளவுக்குள்
மீள முடியாமல்...!!!!
உண்மைதான் நீங்க சொல்வது..
ReplyDeleteஎண்ணியதுவும் வேண்டியதுவும்
ReplyDeleteஎல்லையின்றி கிடைத்ததுவும்
கோர முகத்தை மறைக்க
மத இன முகமூடி மீண்டும்
சாத்தான்கள் வேதத்தை
தூசு தட்டுகின்றன
நம்பிய பாமரன் மட்டும்
இன்னும் பிளவுக்குள்
மீள முடியாமல்...!!!!//
//
ரொம்ப சரி...
நன்றி வாத்தியாரே
Deleteஇன்டிலியில் இணைத்துவிட்டேன் .
ReplyDeleteநன்றி ஐயா நன்றி
Deleteமதத்திற்கு மதம் பிடித்தால் அழிவுதான்...அன்பு பரவ வேண்டும் மதம் பிடித்த இந்த மனிதர்கள் மீது.
ReplyDeleteஅதைக்கூட போலியாக்கி விட்டார்களே
Deleteஇன்றைய நிலையை தோலுரிக்கும் கவிதை! அருமை!
ReplyDeleteநன்றி நண்பா..!
Delete