Tuesday, June 24, 2014

 2:57 AM      27 comments
இந்த ஆட்டத்தில் என்னை கோர்த்துவிட்ட Angel Fish அக்கா, நல்லா வருவீங்க 

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
   

அம்புட்டு நாளைக்கு நான் இருப்பேனா ? இப்போ படுற பாடே பெரும்பாடா இருக்கு போதும்டா சாமி2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

நிறைய கத்துக்கணும் என்னு நினைக்கேன், என்னனு நினைக்கும் போதுதான் நான் மூணாப்பு பெயிலுங்கிறது ஞாபகம் வருது. என்னத்த சொல்ல.

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இப்போதுதான், கண்ணாடியில என்னையப் பார்த்து சிரிச்சேன், எதுக்குன்னு தான் மறந்து போயிடுச்சி4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

அடுத்த நாள் எல்லோரும் செத்தீங்க, ஒரு பத்து குட்டிம்மா கவிதையா எழுதி வெச்சிருந்து அடுத்த நாள் கொலையா கொன்னுட மாட்டேன் 

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

இத்தனை நாள் எங்களோடு இருந்த உன்னை அடுத்த வீட்டுப் பெண்ணாய் வரும் அந்த நாளில் கண்டிப்பாய் கண்ணீரைத் தவிர வார்த்தை எதுவும் வரப் போவதில்லை எனத் தெரியும் ....

"உனக்காய் அன்பையும் பண்பையும் சீதனமாய் எடுத்துச் செல்கிறாய் மகளே .. உனது புகுந்த வீட்டில் அனைவரிடமும் அன்புடனும் பொறுமையுடனும் கரிசனமாய் இருந்து  அன்பனா சந்தோஷமான ஒரு வீட்டை நிர்வாகிப்பதில் தான் உன் திறமையும் வெற்றியும் ....நல்லதொரு மகளாய் இருந்த நீ சிறந்ததொரு மருமகளாய் இருக்க ஆசிர்வதிக்கிறேன் .."


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

ஜாதியை ஒழித்து பிரதேசவாதங்களை களைந்து மத நல்லிணக்கத்தை உண்டாக்கி உலகம் முழுதும் எல்லோரும் சகல வசதிகளும் சமமாக கிடைக்க முயற்சி செய்வேன்
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

குட்டிம்மாவிடம், வேறு யாருக்கும் வேண்டும் என்றால் என்னிடம் நிறைய ஸ்டாக் இருக்கு, முற்றிலும் இலவசம்
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

முன்பென்றால் நிலைமை வேற, இப்போதென்றால் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பொத்திகிட்டு போவேன் 9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

ஆறுதல்தான் வேறென்னத்தை சொல்ல  
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


இப்பவும் அப்படிதான் இருக்கேன், வக்கனையா தின்னுட்டு, முகநூல் அரட்டை
ஷப்பா.......! முடியல. என்னா திட்டம். அக்கா மீ பாவம்

இதனை தொடர்ந்து எழுத நண்பர்கள்,

ரஹீம் கஸாலிகோவை முத்தரசு  ஆகியோரை கோர்க்கிறேன் 

27 comments:

 1. ஆஆஹா சூப்பர்ப் !!! சுருக்கமாக இருந்தாலும் ஒவ்வொரு பதிலும் பல செய்திகளை சொல்லுது

  பத்து கேள்வியை இருபதா ஆக்கியிருக்கலாமொன்னு தோண்றது :)
  இந்த கேள்விங்களை துவக்கி வைத்தவர் சகோ மதுரை தமிழன்தான் ..எல்லா புகழ் பெருமை அவருக்கே
  எல்லாரும் பரிசுகளை அவருக்கே கொடுத்திடுங்க

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளத்தின் வடிவமைப்பு அருமை பாராட்டுக்கள் அட நீங்க வலைத்தளம் கூட வைத்திருக்கிங்களா எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே? எனக்கு பயந்து மறைச்சு வைச்சிருந்த தளம் வெளியே தெரிஞ்ச்சுடுச்சு பார்தீங்களா இனிமே என்னிடம் இருந்து நீங்க தப்ப முடியாது..

   பரிசு பணமாக இருந்தா மட்டும் என்னிடம் தாருங்கள் வேற ஏதும் என்றால் இந்த ஏஞ்சலின் அவர்களுக்கே கொடுத்து விடுங்கள்

   Delete
 2. கேள்வி ஐந்துக்கு உங்க பதில் ..எனக்கு அப்படியே என் தந்தை எனக்கு சொன்னது நினைவுக்கு வருது

  ReplyDelete
 3. ஒரு பத்து குட்டிம்மா கவிதையா எழுதி வெச்சிருந்து அடுத்த நாள் கொலையா கொன்னுட மாட்டேன் //அவ்வவ் வேணாம் நீங்க யூ கே வந்திடுங்க இங்கே கரண்ட் போகவே போகாது ..:)

  ReplyDelete
  Replies
  1. இதுதானா கோர்த்துவிட்டு கட்டிவெச்சு அடிக்கிரதுன்றது

   Delete
 4. //ஒரு பத்து குட்டிம்மா கவிதையா எழுதி வெச்சிருந்து அடுத்த நாள் கொலையா கொன்னுட மாட்டேன் /// ஹஹஹா..

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் நடக்கும் ஆவி, நல்ல வேளை இங்க கரண்டு போறதில்லை

   Delete
 5. ஆனாலும் பத்து கவிதையை பவர்கட் நேரத்தில் எப்படிங்க எழுதுவீங்க? :)

  ReplyDelete
  Replies
  1. பேப்பர் பேனா இன்னும் வெச்சிருக்கேன், ஜமாயிச்சிடுவன்

   Delete
 6. இஞ்சையும் குட்டிம்மா கவிதைகளா ..... கலக்குங்க கவிஞரே

  ReplyDelete
 7. தாயி உங்களுக்கு ஏன் பொறாமை ?

  ReplyDelete
 8. ஆனாலும் இம்புட்டு சுருக்கமா எழுதக் கூடாது...
  என்ன பத்துக் கவிதையா??? ஓடுறா வாசி...

  ReplyDelete
  Replies
  1. நண்பா வெச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறோம் , அவசரத்துல தோணினத எழுதினேன்

   Delete
 9. அட நீங்க வலைத்தளம் கூட வைத்திருக்கிங்களா எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே? எனக்கு பயந்து மறைச்சு வைச்சிருந்த தளம் வெளியே தெரிஞ்ச்சுடுச்சு பார்தீங்களா இனிமே என்னிடம் இருந்து நீங்க தப்ப முடியாது..

  ReplyDelete
  Replies
  1. அதான் வந்தாச்சி இல்ல, அடிக்கடி வாங்க பழகுவோம்

   Delete
 10. எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையாய் பதில் சொன்ன நீங்க... 6 வது கேள்விக்கு மட்டும் ரொம்ப எமோஷனலாக பதில் சொல்லீட்டிங்க.... குழந்தைகள் மீது அவ்வளவு பாசமா?

  ReplyDelete
  Replies
  1. அது நான் போட வில்லை நம்ம வீட்டுக்கரம்மாகிட்ட கேட்டு போட்டேன், அது அவங்க டிப்பர்ட்மென்ட் தானே

   Delete
  2. இங்கதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இம்புட்டு தெளிவாய்!! இருக்கும் நீங்க பிள்ளைங்க வளார்ப்பை வூட்டம்மாக்கிட்ட தள்ளீட்டீங்க. வெளிநாட்டில் இருக்கேன்க்கான்னுலாம் சமாளிக்கப்படாது.

   கேள்வியில் அவங்க திருமணத்தின் போது என்ன அறிவுரை சொல்லுவீங்கன்னுதான் கேட்டிருக்காங்க.

   Delete
  3. உண்மைக்கு சகோ, நமக்கு அந்தளவுக்ககு வெவரம் பத்தாது, எல்லாம் அவங்கதான், பசங்க கூட வேணுமின்னா சண்டை போட்டு மிட்டாய் பறிச்சு தின்பேன், ஒரு வேளை எதிர்காலத்தில் எப்படியோ தெரியல, இப்போதைக்கு இதான் உண்மை

   Delete
  4. கலை :) ஓடிவா இங்கே உனக்கொரு ரகசியம் சொல்லணும் ..இலி சின்னபிள்ளைங்க கிட்ட முட்டாய் பிடுங்கி சாப்பிட்டிருக்கார் !!!

   Delete
  5. ஆகா தெரியாம உளறிட்டேனா

   Delete
 11. இத்தனை சுருக்கமான பதில்களை நான் எதிர்பார்க்கலை. ஆனா நிறைவா எழுதியிருக்கீங்க..

  ReplyDelete
  Replies
  1. அவசரத்துக்கு எழுதினேன், இப்போ கத்துக் குட்டி தானே, போகப் போக சரிவரும் மன்னிச்சு

   Delete
 12. ஒன்னும் தெரியாதவனா பத்து கேள்விகளுக்கும் இப்படி பொறுப்பா பதில் சொல்லி இருக்கிறது ?
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்ண ஐயா, அங்க இங்கன்னு தேத்தி ஒருவழியா சமாளிச்சிட்டுடேன், வரவிற்கும் கருத்திக்கும் நன்றி ஐயா

   Delete
 13. பத்து கேள்வி பதில்களுக்கும் நீங்கள் பெறுவது 10/10 மதிப்பெண்கள் இல்யாஸ் ஜி

  ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

நானும் ரவுடிதான்

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

ச்சும்மா வரலாம்.. வாங்க!

Powered by Blogger.

மெயில்ல வேற வேணுமாக்கும்

இங்கிருந்து படிக்கறாங்க!!!!