சென்ற பாகத்தில் மந்திரவாதிகளின் பேச்சு, சாதுரியம், சாமர்த்தியம் பற்றியும் அதில் நாம் விழுவது எப்படி என்று பார்த்தோம். இந்த பாகத்தில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்துகட்டி நம் காதில் எப்படி பூ சுற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் இந்த மந்திர வேலைகளை மூன்று பிரிவாக பிரித்து நம்மிடம் இருந்து பணமாக பொருளாக ஆட்டையப் போடுவார்கள்.
- பேய் பிசாசுகளை அடையாளம் காணுதல் உறுதிப் படுத்தல்
- அவற்றை நம் இடத்திலிருந்தும் , பாதிக்கப்பட்டவரிடம் இருந்தும் விரட்டுதல்
- இனி அவைகள் நம்மிடம் அண்டாதவாறு பாதுகாப்பு செய்தல்
நம் இடத்தில் இருக்கும் பேய் பிசாசுகளை அடையாளம் காண பலமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு முறை, நம் வீட்டிக்கு மந்திரவாதி வருவதற்கு முன்பு வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் ஓன்று கொடுப்பார். அதில் முக்கியமாக மூன்று வர்ணத்தில் கோழி முட்டை என்று இருக்கும். மூன்று வர்ணத்தில் தான் உலகத்தில் கோழி முட்டை இருக்கின்றது என்பது வேறு விடயம் (பிரவுன், பழுப்பு, நல்ல வெள்ளை என்பன அவை). குறித்த நாளில் மந்திரவாதி நம் வீட்டுக்கு வருகை தந்து, வாங்கிய வாங்கப் போகின்ற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மந்திரம் சொல்லிவிட்டு அந்த மூன்று முட்டைகளையும் பரிசோதித்து விட்டு அதில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்தெடுத்து வீட்டு முற்றத்தில் அவர் கையால் 2 அடி வரை குழி தோண்டி மந்திரம் மீண்டும் சொல்லி முட்டையை அவர் கையாலேயே நாம் எல்லோரும் பார்க்க குழியில் வைத்து மந்திர தண்ணிய அதன் மீது தெளித்து குழியை மூடி விடுவார், பின் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள திடகாத்திரமான ஆணை கூப்பிட்டு அந்த குழியை மீண்டும் தோண்டி அந்த முட்டையை எடுத்து வர சொல்லி விட்டு நாம் கொடுத்த அவர் சிற்றுண்டியில் கவனமாக இருப்பார். தோண்ட சென்றவர் அன்றைய பொழுதுக்கு தோண்டினாலும் மசகு எண்ணை வந்தாலும் வருமே தவிர முட்டை கிடைக்காது. உடனே மந்திரவாதி அந்த இடத்துக்கு வந்து குழியை பரிசோதித்து முட்டையை கொண்டு சென்ற பேயின் பூர்வீகமும் அது ஏன் நம்மை பிடித்தது என்ற வெவரமும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுவார்.
நடந்தது இதுதான், தங்கம் வேலைகளுக்கு பாவிக்கப்படும் வெண்காரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு தன்மை இருக்கிறது, காற்றுப் பட்டால் திண்மம் ஆகிவிடும், அப்படி அதனை திண்மமாக்கி முட்டை வடிவத்தில் மந்திரவாதி சீவி வைத்துக் கொள்வார் யாருக்கும் தெரியாமல். இந்த முட்டை வெவகாரத்தில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்து எடுத்ததுக்கும் காரணம், இந்த வெண்காரத்தால் செய்யப்பட்ட முட்டை அதே மாதிரி கலரில் இருப்பது ஆகும். உண்மையான கோழி முட்டையையும் இந்த வெண்கார முட்டையையும் மாற்றுவதுதான் மந்திரவாதியின் உழைப்பு தந்திரம். பின் அவர் கையால் வெண்கார முட்டையை குழியுனுள் வைப்பதும் யாரும் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக தான். அதன் பின் மந்திரத் தண்ணி தெளிப்பதில் தான் விசயமே இருக்கிறது அது மந்திரத் தண்ணி அல்ல. வெறும் பச்சத்தண்ணி தான். வெண்காரத்தில் ஒரு தன்மை உள்ளது, தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடும், விஞ்ஞான முறைப்படி சொல்வதானால், தண்ணீர் பட்டவுடன் எச்சமில்லாமல் தகனமடையும். இப்போ புரிந்திருக்கும் முட்டை எங்கு போயிருக்கும் என்று.
இப்படி ஆயிரம் வழிகளில் பேய் பிசாசுகளை அடையாளம் காணலாம் , அடுத்த பாகத்தில் கண்டு பிடித்த பேய் பிசாசுகளை நம் வீட்டில் இருந்தும் நம்மில் இருந்தும் எப்படி விரட்டுவார்கள் என்று பார்ப்போம்.
தொடரும்..............!
முந்தைய பாகத்திக்கு : பாகம் 01
ஏன் தொழில் ரகசியத்தை சொல்லறேன்னு கடுப்பு?
ReplyDeleteஅவரோட ஒரு "ம்" ல ஆயிரம் அர்த்தம் தொனிக்குதே....
ReplyDeleteஅவர் தொழில்ல கைய வெச்சிட்டென்னு யோசிக்கிறாரு
Deleteசுவாரஸியமா இருக்கு...
ReplyDeleteநன்றி நண்பரே தொடர்வதற்கு
Deleteவிஞ்ஞான விளக்கம் சிறப்பு!
ReplyDeleteமுட்டைல இவ்ளோ மேட்டரா !!! ம்ம்ம் தொடருங்கள் ..
ReplyDeleteஇன்னும் வரும் சகோ, வரவிற்கும் கருத்துக்கும் நன்றி
Deletesuper bro
ReplyDeleteநன்றி சகோ, வரவிற்கும் கருத்திக்கும்
Deleteமுட்டையிலும் கலப்பா??:)))
ReplyDeleteஅது மட்டுமில்லை எல்லாமே, அப்போதானே யாவாரம் நடக்கும்
Deleteஅடடா.... முட்டை போச்சே.....
ReplyDeleteஇன்னும் வரும்
Delete