சிறந்த மந்திரவாதி ஆவதற்கு முதலில் நா வன்மை அவசியம் ஆகிறது, உலகில் உள்ள எல்லோரையும் ஓன்று கூட்டி ஒருத்தர் விடாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சாஸ்த்திரத்தை நா வன்மையால் கூறமுடியும், "நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்வீர்கள் உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கூறினால் யார்தான் மறுக்க போகிறார்கள். இது சாதாரண மனித மனோன் நிலை. இதுதான் மந்திரவாதிகளின் முதல் அஸ்திரம்.
இரண்டாவது சமயோசிதம், உதாரணம் மந்திரவாதியிடம் நீங்கள் சென்றால் நீங்கள் விபரம் சொல்லுவதற்கு முன்பே அவர் விபரம் சொல்லுவார் இப்படி, "தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்பார், உடனே நாம் ஏதாவது தொலைத்துவிட்டுத்தான் அங்கு போயிருந்தோம் என்றால் உடனே நாம் "கிடைக்குமா? கிடைக்காதா?" என்போம். அவருக்கு நிச்சயம் ஆகிவிடும் நாம் தொலைத்து விட்டுதான் வந்திருக்கிறோம் என்று. ஒரு வேளை நாம் வீட்டில் உள்ளவரின் நோய் சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தால், நாம் யோசிப்போம் நாம் நோய்க்கு மாந்திரிகம் பார்க்க வந்திருக்கிறோம் இவர் தொலைத்த கதை சொல்கிறார் என்று, இப்போதான் சமயோசிதம் தேவை. நாம் யோசிப்பதை பார்த்ததும் அவர் அடுத்த பிட்டை போடுவார், "வாழ்கையில் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்று, நாம் அவுட். வீட்டில் யாரும் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது மேற்சொன்னவை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் ஏற்ற இறக்கங்ககளுடன் சொல்ல வேண்டும்.
மூன்றாவது வார்த்தை ஜாலங்ககள், சொல் மயக்கம் வரும் படி பேசுவது, இப்போ நம்மிடம் சொல்லுவார், "எல்லாவற்றையும் பார்க்கலாம், முதலில் உங்கள் வீட்டு முற்றத்தில் கால் படாத மண்ணை கைபடாமல் கொண்டுவா" என்பார், சின்ன விசயம்தான் ஆனால் சட்டென்று விளங்காது. அது மட்டுமல்ல, "ஒரு கிடா ஆடு வேண்டும் பலி கொடுக்க, ஆனால் அதன் தாயிக்கு இதற்க்கு பிறகு குட்டி இருக்க கூடாது" என்றெல்லாம் நம்மை சுத்தலில் விடுவார்கள், எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள். ஒன்னும் இல்லை முதலில் சொன்னதற்கு நம் முற்றத்தில் பள்ளம் தோண்டி அதற்குள் இருக்கும் மண்ணை கையில் கிளவுஸ் எதாவது போட்டு எடுக்க வேண்டும், மற்றது தாய் இறந்துவிட்ட ஆட்டு கிடா வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் இதெல்லாம் எதற்கு கேட்கிறார்கள் என்பதுதான் இறைவனுக்கு வெளிச்சம்.
அடுத்த பகுதியில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்து கட்டி எப்படி மாந்திரிகம் செய்கிறார்கள் என்று சொல்கிறேன்.
தொடரும்.......!
நல்லாத்தான் ஆய்வு செய்து இருக்கின்றீர்கள் போல தொடரட்டும்...
ReplyDeleteநன்றி நண்பா வரவிற்கும் கருத்திக்கும்
Deleteகலந்துகட்டி அடிங்க...தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி நண்பரே வரவிற்கும் தொடர்வதற்கும்
Deleteஆஹா !!! இது நான் ரொம்ப நாளா நினைசிக்கிட்டுருந்த ஒரு விஷயம் :)
ReplyDeleteதொடருங்கள் ..படிக்க ஆர்வமா இருக்கு .
நன்றி சகோ, தொடர்ந்து வரும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper nanba
ReplyDeleteநன்றி நண்பா வரவிற்கு
ReplyDeleteமந்திர வித்தை சுவாரஸ்யமாத்தான் இருக்கு! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteமந்திரம் மாயாஜாலம் எல்லாம் தெரியுமா???ம்கூம்..!அருமை.
ReplyDeleteநன்றி நண்பரே வரவிற்கும் கருத்துக்கும்
ReplyDeleteநன்றி அக்கா
ReplyDeleteபடிக்கத் தூண்டும் உரை நடையில் கலக்கியிருக்கிங்க , தொடர்கிறேன்..............................
ReplyDeleteநன்றி தண்ணி வரவிட்க்கும் கருத்திக்கும்
ReplyDelete