முந்தைய பாகத்தில் மந்திரவாதிகள் நம்மையும் நம் இடத்திலும் பேய் பிசாசுகளை அடையாளம் காணுவதிலும் அதை உறுதிப்படுத்துவதிலும் நம்மை எப்படி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் என்று பார்த்தோம். இனி அப்படி அடையாளம்(?) காணப்பட்ட பேய் அல்லது பிசாசை விரட்டுகிறேன் பேர்வழி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் நம்மை பிடித்த பேய் பிசாசு பற்றி மந்திரவாதி கொடுப்பார் பாருங்க விளக்க வெண்ணை ஒண்ணு மதிமயங்கி போயிடுவோம், அது ஏன் வந்தது, நம்மை ஏன் பிடித்தது, அதற்க்கு இப்போ என்ன வேணும், எப்படி விரட்டுவது என்று அள்ளி விடுவாரு பாருங்க ஏதோ அவருதான் அதை வளர்த்து நம்ம மேல ஏவி விட்டவர் மாதிரி இருக்கும். அப்புறம் அதை விரட்ட ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம கையில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பார், அதில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏன் வாங்க சொன்னார் என்று நமக்கும் புரியாது அவருக்கும் தெரியாது. இருந்தாலும் வாங்கி வைப்போம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த மாந்திரிகத்திக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஓன்று ரெண்டு பொருட்கள் நம்மை வாங்க சொல்ல மாட்டார் அவரே வாங்கிக் கொள்வதாக் சொல்லி அதற்கும் வேறையாக நம்மிடம் பணத்தை ஆட்டையப் போட்டு விடுவார். இப்படி பேய் விரட்டுவதற்கு பல முறைகள் இருந்தாலும் உதாரணத்திக்கு ஒரு முறையை பார்ப்போம்.
குறித்த நாளில் நம் வீட்டிற்க்கு வரும் மந்திரவாதி, மந்திர வேலைகளுக்கு உரிய ஆயத்தங்களை செய்து விட்டு, பாதிக்கப் பட்டவரை அவ்விடத்தில் தன் முன்னால் வைத்து நாலு மணி நேரம் மந்திரம் சொல்லி பாதிக்கப் பட்டவரை படுத்தும் பாடு இருக்கே, உண்மையில் பேய் இருந்தால் கூட அப்படி ஒரு சித்திரவதை பண்ணி இருக்குமா என்பது சந்தேகேமே. இதையெல்லாம் முடித்து விட்டு கிளைமாக்ஸ் ஆரம்பமாகும். ஒரு நன்றாக சீவி எடுக்கப்பட்ட தேங்காய் சிரட்டை (இந்த சிரட்டைதான் நம் வீடும் நம் இடமும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார்) ஒன்றில் மந்திரவாதி "மந்திரித்து" கொண்டு வந்த ஏழு சுண்ணாம்பு சிப்பிகளை போடுவார் (மூன்று, ஏழு, பதினொன்று என்ன கணக்கு என்று அவர்களுக்கும் தெரியாது), அதுதான் நம் வீட்டில் உள்ள பேய்கள் என்று விளக்கம் வேறு. பின் அவரே கொண்டுவந்த மந்திர தண்ணியை அதனுள் ஊற்றி (அதுதான் அவரது மந்திர சக்தியாம்) மந்திரம் சொல்ல தொடங்குவார். இப்போது மந்திரம் உச்சத்தை அடையும். இந்த நேரத்தில் சிரட்டையினுள் இருக்கும் சிப்பிகள் மெதுவாக ஒவ்வொன்றாக தானாக வெளியேறத் தொடங்கும். எல்லாம் வெளியேறி முடிந்தவுடன் மந்திரவாதி முகத்தை பார்க்கவேண்டும். மலையைப் பிளந்த பெருமிதம் தெரியும். நமக்கு சர்வமும் ஒடுங்கிப் போய் அவர் தெய்வமாக தெரிவார். பின் அவருக்கு உரியதை பயபக்தியோடு கொடுத்து வழியனுப்பி வைப்போம்.
உண்மையில் ஒரு பாத்திரம் போன்ற ஒன்றில் இருந்து உள்ளே போடப்பட்ட ஒரு சடப் பொருள் தானாக அசைந்து வெளியேறினால் அதற்கு காரணமானவனை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல. இங்கு நடந்தது இதுதான், சிப்பிகள் உண்மையானவை, அதில் எந்த மாற்றமும் இல்லை, தேங்காய் சிரட்டையும் உண்மையானது அதிலும் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஏமாற்று வித்தை இருப்பது மந்திரவாதி கொண்டு வந்த மந்திர தண்ணியில் தான், அது மந்திர தண்ணி அல்ல, பேட்டரி அசிட், பள்ளியில் விஞ்ஞான பாடத்தை ஒழுங்காக படித்தோருக்கு இப்போது விளங்கி இருக்கும். சுண்ணாம்பு சிப்பி ஒரு காரம், பேட்டரி அசிட் ஒரு அமிலம். எப்போதும் இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது, அதிலும் சுண்ணாம்பு சிப்பி பலகீனமானது. அதனால் தான் பேட்டரி அசிட் தாக்கம் தாங்காமல் தானாக நகரத் தொடங்கும். அனால் இங்கு தேங்காய் சிரட்டை எடுத்ததன் காரணம், வேறு பாத்திரத்தில் இதனை செய்தால் காரமோ அமிலமோ அதனுடன் தாகம் புரிந்து மந்திரவாதிக்கு தேவையான பெறுபேறு கிடைக்காமல் போகலாம் என்பதால் தான்.
இப்போது உங்கள் வீட்டில் உள்ள உங்களை பிடித்த பேயினை விரட்டி ஆகிவிட்டது. அத்தோடு போச்சா திரும்ப வந்தால், அதனால் அடுத்த பதிவில் திரும்ப வராமல் எப்படி காவல் செய்வது என்று பார்ப்போம்.
-தொடரும்
தொடருங்க
ReplyDeleteநன்றிங்
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு தொடர் ..வாழ்த்துக்கள் !
ReplyDeleteத ம 2
நன்றி ஐயா வரவிற்கும் கருத்திக்கும்
Deleteஇன்னும் எதிர் பார்க்கிறோம்.....!!!!
ReplyDelete