ஊடலும் கூடலும்.......!
ஒன்றுமில்லை என்ற
ஒத்த வார்த்தையில்
ஓராயிரம் அரத்தங்களை
ஒளித்து வைத்து விட்டு
ஓயாமல் என்னை வதைப்பது ஏனோ..........?
உன் பாதி மௌனத்தில்
மோதி மூக்குடைந்து
கூனிக் குறுகி
நாணத்தில் நான்....!
மூச்சடக்கி முக்குளிக்கிறேன்
உயிர் திணறுகிறது
முத்தைத்தான் காணோம்....!
ஏனடி சொன்னாய்..?
எதற்கு சொன்னாய்..?
என்னை கொல்லவா..?
உயிரை வெல்லவா..?
சட்டென்று சொன்னதால்
திக்குமுக்காடி போனேன்
காதோடு சொன்னதால்
பித்தனாக ஆகிவிட்டேன்....!
உள்ளத்தையும் திறந்து விட்டாய்
கள்ளத்தையும் களைந்து விட்டாய்
தோழி நீ சொன்ன காதல்
கொண்டுவந்து சேர்க்கும்
காத்திரு என்னை...!
கள்ளத்ததையும் களைந்து விட்டாய்//
ReplyDeleteகள்ளத்தையா, கள்ளத்தனத்தை யா? எதோ ஸ்லிப் ஆகியிருக்கு.. :)
எல்லாம் நல்லா இருந்தது..
கள்ளம் என்பது கள்ளத்தனைத்தை தான் சொல்லும் நண்பா!
Deleteஒரு "த" எக்ஸ்ட்ராவா இருக்குன்னு சொன்னேன்.. "கள்ளத்தையும்" ன்னு இருக்கணும் இல்லையா? TYPO..
Deleteநன்றி நண்பா திருத்தி விட்டேன்
Deleteமூச்சடக்கி முக்குளிக்கிறேன்
ReplyDeleteஉயிர் திணறுகிறது
முத்தைத்தான் காணோம்....!//
எப்படி பாஸ் இப்படியெல்லாம் ???
வாத்தி வேணா, அழுதிருவேன்
ReplyDeleteஎல்லா கவிதையும் நல்லா இருக்கு !!
ReplyDeleteநன்றி அக்கா நன்றி
Deleteகவிதை அருமை .வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தனி மரம்
Deleteஅழகான காதல் கவிதைகள்! அருமை! நன்றி!
ReplyDeleteகுட்டிம்மா கவிதைகள் அருமையிலும் அருமை... அண்ணே...
ReplyDeleteநன்றி தண்ணி
Delete