வண்ணமான ஊரும்,
திண்ணமான வாழ்வும்,
மங்காத எம் தமிழு,ம்
மாறது பெற்ற வேதமும்,
கசடறக் கற்ற கல்வியுமாய்,
நெறிப் பட்டிருந்தோம்,
ஒரு தாய் மக்களாக.....
மேற்கில் சோறு விளையும் சேறும் ,
கிழக்கில் வங்கத் தாய் பொக்கிசமும்,
தெற்கில் வெட்டியுண்ணும் தயிரும்,
வடக்கில் பச்சைகள் யாவும்,
ஊடறுத்து ஓடும் ஆறும் ,
என்ன குறை கண்டோம் ,
ஊருக்கு கல்விக்கு சாலை,
நாட்டுக்கு சோத்துக்கு ஆலை,
என்று, வாரி வழங்கி,
யாவரையும் வளப்படுத்தி,
நாமும் வளப்பட்டோம்...
வேரில் ஊற்றிய வெந்நீராய்,
தீயோர் கொண்ட
தனியாத செயலால்
யுத்தம் எனும் வன்முறை கொண்டு.
சிதறித்தான் போனோமே!!!
சிந்திக்க மறந்தோமே!!!
தோளில் ஒரு கையும்,
இடுப்பில் ஒரு கையுமாய்,
உயிராய் உறவாடிய,
கண்ணனும் ,காதரும்
இன்றும் சந்திக்கும் வேளையில்,
பார்த்து சிந்திக்கையில்,
இடுப்பையும் கையையும்
ஆயுதம் கொண்டவனோ,
கொல்லத்தான் வந்தவனோ
எங்களுக்கு என்னாச்சு??
சர்வமும் போயாச்சு....
தூரத்தில் தெரியும் ஒளி
வரும் போது வரட்டும்.....
மெழுகுவர்த்தி போதும்
எங்கள் உண்மை முகம் காண...
சிதறித்தான் போனோமே!!!
சிந்திக்க மறந்தோமே!!!
தோளில் ஒரு கையும்,
இடுப்பில் ஒரு கையுமாய்,
உயிராய் உறவாடிய,
கண்ணனும் ,காதரும்
இன்றும் சந்திக்கும் வேளையில்,
பார்த்து சிந்திக்கையில்,
இடுப்பையும் கையையும்
ஆயுதம் கொண்டவனோ,
கொல்லத்தான் வந்தவனோ
எங்களுக்கு என்னாச்சு??
சர்வமும் போயாச்சு....
தூரத்தில் தெரியும் ஒளி
வரும் போது வரட்டும்.....
மெழுகுவர்த்தி போதும்
எங்கள் உண்மை முகம் காண...
அருமையான கவிதை எமக்கு இப்பதேவை மெழுகுவர்த்திதான்.
ReplyDeleteதூரத்தில் ஒளி காட்டி எத்தனை நாளைக்குத்தான் எமாத்துவார்கள்
Deleteவரிகளில் உள்ள வலியை உணர முடிகிறது நண்பா!
ReplyDeleteநன்றி நண்பா வரவிற்கும் கருத்துக்கும்
Delete