பிரிவோடு............!
பிரிவதாக சொல்லிவிட்டு
இன்னும் என்னுள்
உறைந்து கிடக்கிறாய்
உன் நினைவுகளை விட்டு
என்னை அசைய விடாமல்..........!
இது தற்காலிகம் என்றாலும்
சித்திரவதை கூடத்தில்
வதை படுகிறேன்
கைதியாக நான்
உறைந்து கிடக்கும்
உன் நினைவுகள்
எனும் விலங்கோடு .......!
நம்ப முடியவில்லை
விலங்கும் நானே
போட்டுக்கொண்டேன்
சித்திரவதை கூடத்தில்
எனை நானே ஆளாக்கினேன்..........!
காவலுக்கும் ஆளில்லை
தப்பிக்கவும் பிரியமில்லை
இப்படியே போகட்டும்
கடைசிவரை குட்டிம்மா...........!
மகிழ்வோடு.....!
உனக்காய் காத்திருந்தும்
கண்கள் பூத்திருந்தும்
நீ வரவில்லை...........!
என் கோபம் மேலாடியும்
உன் மீது வழிந்தோடியும்
நீ வரவில்லை...........!
நிமிடங்கள் கரைந்து போக
பொழுதும் விரைந்து ஏக
நீ வரவில்லை...........!
நெஞ்சம் தவிதவிக்க
உன் எண்ணம் பரிதவிக்க
நீ வரவில்லை...........!
இத்தனை எனை ஆட்கொண்டும்
சித்தனைப்போல் கால் கொண்டும்
நீ வரவில்லை...........!
பகலவனை கண்ட
பனித்துளி அறியேன்
தாயினைக் கண்ட
மழலையின் மகிழ்ச்சி அறியேன்
தேன் மலர் கண்ட
வண்டின் மனம் கூட அறியேன்
அத்தனையும் உணர்ந்து கொண்டேன்
தாமதித்தில் நீ கேட்ட
மன்னிப்பில் குட்டிம்மா..........!
காவலுக்கும் ஆளில்லை
ReplyDeleteதப்பிக்கவும் பிரியமில்லை
இப்படியே போகட்டும்
கடைசிவரை குட்டிம்மா...///அருமை சகோ இலி..கண்கள் பனித்தன!
நன்றி அக்கா
Deleteஅருமை சூப்பர் நல்லா இருக்கு கலக்கல்
ReplyDeleteநன்றி கலை
Deleteசெல்வி காளிமுத்து அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நான்கு வரிகள்தான் என்னையும் அசைத்தன. குட்டிம்மாவுக்கான கவிதை பிரமாதம் பிரதர்.
ReplyDeleteநன்றி ஐயா நன்றி
ReplyDelete/ பகலவனை கண்ட
ReplyDeleteபனித்துளி அறியேன்
தாயினைக் கண்ட
மழலையின் மகிழ்ச்சி அறியேன்
தேன் மலர் கண்ட
வண்டின் மனம் கூட அறியேன்
அத்தனையும் உணர்ந்து கொண்டேன்
தாமதித்தில் நீ கேட்ட
மன்னிப்பில் குட்டிம்மா..........!
////
பின்னிட்டிங்க பாஸ் ....
எது சடையா வாத்தி?
Deleteபுதிய பரிமாணத்தில் உங்களை காண்கிறேன் , அனைத்தும் அருமை இல்யாஸ் அண்ணன் ,அவர்களே..!! வாழ்த்துக்கள்...!!
ReplyDelete