Thursday, May 22, 2014

உறவாகவும் பிரிவாகவும் 
விஞ்ஞானம் தந்த கண்ணாடித் தடுப்புக்கு 
அப்பால் நீங்களும் இப்பால் நானும் 

தாயாதிச்சொத்துக்கும் 
தாய் வீட்டு சீதனத்துக்கும் 
ஊரே அடிச்சிட்டு கிடைக்கையில
அதில் கடன் கூட வேண்டாமென்று 
உனக்குள்ளும் எனக்குள்ளும் 
கொடுக்கலும் வாங்கலுமாய் 
நமக்குள் நாமே குறுகிக்கிட்டோம் 

பிரிவொன்று வந்து 
வேடிக்கை பார்க்கையில 
அதன் சுவடுகூட தெரியாமல் 
உனக்குள் நீயும் எனக்குள் நானும் 
நம்மை நாம் குறுக்கிகிட்டோம் 

உண்மைதான் 
நம் கண்ணை விற்றுத்தான் 
ஓவியம் வாங்குகிறோம் 
கவலைப் படாதே 
நம் குழந்தைகளின் விழிவழியே 
அதன் வண்ணம் பார்க்கலாம் 

#என் முகப் பக்கத்திலிருந்து 



12 comments:

  1. BLOG கிலும் புகழ் பெற வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பரே. இங்கேயும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க யானைப்பால்தான் நண்பா

      Delete
  3. வாழ்த்துக்கள் அண்ணா ...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
  5. உண்மைதான்
    நம் கண்ணை விற்றுத்தான்
    ஓவியம் வாங்குகிறோம்
    கவலைப் படாதே
    நம் குழந்தைகளின் விழிவழியே
    அதன் வண்ணம் பார்க்கலாம் /// அருமையாக எழுதியிருக்கீங்க அண்ணே..!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்ண உள்ளே உள்ளதுதான்

      Delete
  6. இந்த வண்டி மட்டும் ரிவர்ஸ்ல போய்ட்டு இருக்கே........

    ReplyDelete
    Replies
    1. ரிவர்ஸ் கியர் வேலை செய்யுதா இல்லையானு பார்க்க வேணாமுங்களா

      Delete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!