Thursday, May 29, 2014

நானாகவும் நீயாகவும்
நாம் நமக்காகவும் நட்பாகவும்
எதுவாகவும் எப்படியாகவும்
சொற்களில் தேனாகவும் வேம்பாகவும்
வேம்பில் மருந்தாகவும் கசப்பாகவும்
செய்கை கூடலாகவும் ஊடலாகவும்
ஊடலில் வெறுப்பாகவும் விருப்பாகவும்

அதுவாக எதுவாக அப்படியாக
என்பது இல்லை செப்படி வித்தையாக
ஏட்டிலும் இல்லை 
யார் பாட்டிலும் இல்லை
எவர் கூற்றிலும் இல்லை
உன் மனதை திறந்தால்
இருக்கும் அன்பு சொல்லுமடி






17 comments:

  1. எனக்கு கவிதை ரொம்ப புயிச்சி இருக்கு புயவரே

    ReplyDelete
    Replies
    1. ஒட்டகம் மேய்க்கிற புள்ளைக்கு இவ்வளவு அறிவானு கிண்டல் செய்றிங்களா ???

      Delete
  2. அவள் மனதைத் திறந்தால் அது சொல்லும்தான்... ஆனால் பெண்களின் மனசைத் திறப்பதென்ன அத்தனை எளிய காரியமா பிரதர்...? கவிதை அழகு!

    ReplyDelete
  3. வாத்து மேய்க்குற நம்மை விட அறிவான்னு பொறமை வாத்தி

    ReplyDelete
  4. அது தெரியாம தானே அண்ணே புலம்பி வெச்சிருக்கேன்

    ReplyDelete
  5. உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் . தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா வரவிற்க்கும் கருத்திக்கும்

      Delete
  6. அருமை கவி ஐயா ! உன் மனம் திறப்பு இது கடைதிறப்பு படலம் போல பிரெஞ்சிலும் சொல்லுங்கோ புரியட்டும் பல மரங்களுக்கு!ஹீ

    ReplyDelete
    Replies
    1. தமிழே ததிங்கினதோம் இதுல பிரெஞ்சா, வொய் திஸ் கொலைவெறி தனிமரம்

      Delete
  7. பேசாம நீ இலக்கியம் படிச்சிருக்கலாம் மனோ !

    ReplyDelete
  8. அற்புதமான கவிதை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Replies
    1. வரவிற்க்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ஐயா

      Delete
  10. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே வரவிற்கும் கருத்திக்கும்

      Delete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!