Sunday, October 26, 2014

எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை  துணை நிற்க .....! நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா...

Saturday, September 20, 2014

அவன் புறப்பட்டு விட்டான்,அவள் ஊருக்கு........ அவளைப் பார்க்க பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்பயணம்.... திடீர் ஞானம் வந்து புறப்படவில்லை, இது வரை போகாமலிருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்க்கும் தைரியமில்லை என்பது தான் முக்கியமானது. ஆனால் இப்போது தயக்கத்தை ஆவல் வென்றுவிட காலமும் கைகோர்க்க கிளம்பி விட்டான். பயணம் என்னவோ முன்னோக்கி இருந்தாலும் சிந்தனை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்து. அவன் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது, மேட்டில் ஏறியதை விட...

Sunday, August 31, 2014

இது வரையில் மந்திரவாதிகளும் பூசாரிகளும் இதர பேயோட்டுபவர்களும் நம்மை எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்று பார்த்தோம். இந்த பாகத்தில் இவர்களையும் தாண்டி நம் கண் முன்னால் இடம்பெறும் நம் கோட்டு கோபிநாத் சொல்லுவது போல் அனுமாஷ்ய நிகழ்வுகளை பார்க்கலாம். உதாரணமாக: 01. திடிரென்று ஒருவர் பேய்(?) பிடித்து அவர்க்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத மொழி பேசுதல். ௦2. வழமையான அளவினை விட பலமடங்கு...

Thursday, July 10, 2014

மதங்களின் சாத்வீகமும் மனித நற்பண்புகளும் கழுத்து நெரிக்கப் பட்டு பிணங்களோடு பிணங்களாக அடுக்கப் படுகின்றன ஒன்றாக...! ஏற்றப் பட்ட வெள்ளைக்கொடி இறக்கப்பட்டு கிழிக்கப்பட்டு போர்த்துகின்றன அவற்றை பறக்கவிடப் பட வேண்டிய சமாதனப் புறா  சட்டியில் கொதிக்கிறது  இழவுவீட்டு விருந்தாக...!! எண்ணிக்கையும் போதாது  எண்ணியதும் தேறாது என்றதும் பொங்கினர் கொன்று...
பரவசமானேன் காட்டாமல் மறைத்தாலும் செல்லமாக காயப்படுத்தினாலும் நாணந்தான் தடுத்தாலும் நுகர்ந்து சுவாசிக்கிறேன் உன் அன்பை........!! பேசியதும் தெளிவில்லை பேசாததும் தெரியவில்லை  மவுனமும் புரியவில்லை அறியவும் வழியுமில்லை...!! தாங்காமல் தவிக்கிறேன் அனல்புழுவாய் தெறிக்கிறேன் கனவினையும் அழிக்கிறேன் உன் வார்த்தை பார்த்தே  கண்கள் பனிக்கிறேன்.....!! என்...

Thursday, July 3, 2014

மந்திரவாதிகளின் வாக்கு சாதூரியத்தால் நாம் எப்படி மயங்குகிறோம் என்று இந்த தொடரின் 01ம் பாகத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்குறேன். சில வேளைகளில் நம்மை நம் வாயாலேயே சிக்கலில் மாட்டியும் விடுவார்கள். நம் வீட்டில் உள்ள பொருள், உதாரணமாக தங்கநகை வீட்டில் ஓரிடத்தில் வைத்து விடுவோம். அதுவும் தொலைந்தும் விடும், அந்த நேரம் வீட்டுக்கு வந்த ஒருவரை சந்தேகம் வேறு படுவோம். இருந்தாலும்...

Wednesday, July 2, 2014

ஊடலும் கூடலும்.......!  ஒன்றுமில்லை என்ற  ஒத்த வார்த்தையில் ஓராயிரம் அரத்தங்களை  ஒளித்து வைத்து விட்டு  ஓயாமல் என்னை வதைப்பது ஏனோ..........? உன் பாதி மௌனத்தில்  மோதி மூக்குடைந்து கூனிக் குறுகி நாணத்தில் நான்....! மூச்சடக்கி முக்குளிக்கிறேன் உயிர் திணறுகிறது முத்தைத்தான் காணோம்....! ஏனடி சொன்னாய்..? எதற்கு...

Sunday, June 29, 2014

சென்ற பாகங்களில் ஒரு மந்திரவாதி நம் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்ற போர்வையில், தன்  தந்திர வித்தைகளாலும் பேச்சு சாதுரியத்தாலும் நம்மை ஏமாற்றி நம் நேரம், பொருள், பணம் என்பவற்றை எல்லாம் எப்படி அபகரிக்கிறான் என்று பார்த்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருந்து மாயம் என்கின்ற போர்வையில் என்னவென்று தெரியாத வஸ்த்துக்களை கொடுத்து, பிற்காலத்தில் நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும்...

Tuesday, June 24, 2014

இந்த ஆட்டத்தில் என்னை கோர்த்துவிட்ட Angel Fish அக்கா, நல்லா வருவீங்க   1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்    கொண்டாட விரும்புகிறீர்கள்?    அம்புட்டு நாளைக்கு நான் இருப்பேனா ? இப்போ படுற பாடே பெரும்பாடா இருக்கு போதும்டா சாமி 2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? நிறைய கத்துக்கணும் என்னு நினைக்கேன், என்னனு நினைக்கும் போதுதான்...

Sunday, June 15, 2014

முந்தைய பாகத்தில், நம்மையும் நம் வீட்டையும் பிடித்த பேயினை மந்திரவாதி எப்படி ஓட்டினார்(?) என்று பார்த்தோம். அப்பிடி ஆட்டையை போட்ட பின், இனி நம்மை அது பிடிக்காமல், நெருங்காமல் பாதுகாப்பு எப்படி கொடுப்பார் என்று பார்ப்போம். முதலில் நம்மிடம் சொல்லுவார், ஒரு கிடா ஆடு வேண்டும், அதன் தாயிக்கு இதன் பிறகு குட்டி இருக்கக் கூடாது என்று. நமக்கு தலை சுத்திப் போகும் என்ன சொல்கிறார்...

Wednesday, June 11, 2014

வண்ணமான   ஊரும், திண்ணமான வாழ்வும்,  மங்காத எம் தமிழு,ம்  மாறது பெற்ற வேதமும்,  கசடறக் கற்ற கல்வியுமாய்,  நெறிப் பட்டிருந்தோம்,  ஒரு தாய் மக்களாக..... மேற்கில் சோறு விளையும் சேறும் , கிழக்கில் வங்கத் தாய் பொக்கிசமும்,  தெற்கில் வெட்டியுண்ணும் தயிரும்,  வடக்கில் பச்சைகள் யாவும்,  ஊடறுத்து ஓடும் ஆறும் , என்ன குறை...

Tuesday, June 10, 2014

நினைவுகள் மட்டும்......! பறந்து சென்றாலும்  விரைந்து மறைந்தாலும்  என் எண்ணங்களும்  உன் நினைவுகளும்  கூடவே பயணிக்கும்......! நாற்திசையில் எத்திசையோ  செலுத்தியது எவ்விசையோ  ஏதொன்றும் அறியேன்  தொடரும் வழி புரியேன்........!! கண்காணா தூரத்தில்  பொழுதறியா நேரத்தில்  தனிமையில் நீயும்  வெறுமையில் நானும்.....!!! எனக்கும்...

Wednesday, June 4, 2014

பிரிவோடு............! பிரிவதாக சொல்லிவிட்டு  இன்னும் என்னுள்  உறைந்து கிடக்கிறாய்  உன் நினைவுகளை விட்டு என்னை அசைய விடாமல்..........! இது தற்காலிகம் என்றாலும்  சித்திரவதை கூடத்தில்  வதை படுகிறேன்  கைதியாக நான்  உறைந்து கிடக்கும்  உன் நினைவுகள்  எனும் விலங்கோடு .......! நம்ப முடியவில்லை  விலங்கும் நானே  போட்டுக்கொண்டேன்  சித்திரவதை...

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!