Sunday, June 1, 2014

எனது நண்பர் வாய்ப்பாட்டு அவர்களின் முகப் பக்கத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த சொல்லாடல், அவரின் தமிழ் வியக்க வைத்த ஒன்று. என் தமிழ் புடம் போடப் பட்டதும் அவரிடம்தான்.


வாய்ப்பாட்டு:

விடை தெரிந்த கேள்வியது 
வாழ்க்கை வழியில்தான் 
எத்தனை எத்தனை பாடங்கள் 
எழுதியும் எழுதாததுமான 
எத்துணை  எத்துணை  தேர்வுகள் 
தேர்ந்தாலும் தோற்றாலும் 
அத்தனைக்கும் ஒரே விடைதான் 
அது அனைவரும் அறிந்த விடைதான் 
ஆனாலும் பாடங்கள் படித்த வண்ணமும் 
தேர்வுகள் எழுதிய வண்ணமுமாய் 
மனிதன் விடை தெரிந்த கேள்விக்கு 


ஒண்ணும் தெரியாதவன்:

தெரிந்த விடையை பகுத்தரியாவிட்டால் 
தேர்வில் தோல்விதான் 
விடை தெரிந்த கேள்விக்கு 


வாய்ப்பாட்டு:

என்னதான் பகுத்தாலும் அறிந்தாலும் 
அல்லது அரிந்து பகுத்தாலும் 
விடையத்தை கேள்வியிலேயே தெளிவாக வைத்து 
கேள்வியிலேயே நம்மை வைத்து 
தேடிக்கொண்டிருப்பதிலேயே 
காலத்தை நகர்த்தும் நாயகன் அவன் 
உறவும் துறவுமாய் வாழ்வில் உழன்று மருண்டு
பதிலிருந்தும் கேள்வியிலேயே முடிந்து போகும் வாழக்கை


ஒண்ணும் தெரியாதவன்:

நாயகனை பகுத்தறியா பகுத்தறிவில் 
நாயகன் வைத்த கேள்வியை பகுத்தறிந்து 
விடையறிவதை நாயகனே அறிவான் 


வாய்ப்பாட்டு:

எல்லாம் அறிந்த ஏகன் அவன் 
இனி ஒன்றை அறிய இனி ஒன்றும் இல்லை 
எங்கும் அறிந்தொழுகவேண்டி அவன் தந்த பகுத்தறிவு 
அவனை அளக்க முற்படின் 
எதையளக்க அறிவுதந்தானோ 
அதை மறந்து ஏற்றம் தரும் 
உபயம் தொறந்து எது கேள்வி என்று அறியா 
எல்லாமே கேள்வியாகவே 
தொக்கி நிற்கும் தொவியாகும் வாழ்வு 


ஒண்ணும் தெரியாதவன்:

மனைவி மக்கள் 
உற்றம் சுற்றம் 
நட்பு துரோகம் 
கூடவே தன்னையும் முழுமையாக 
பகுத்தறிய முடியா பகுத்தறிவினை கொண்டு 
இவையனைத்தையும் ஆட்டுவிக்கும் 
ஏகனை பகுத்தறிய முற்படின் 
ஏற்றம் உண்டோ 
இம்மை மறுமை வாழ்வில் 



கண்ணை மூடிக்கொண்டு 
தியானம் அல்ல என் தத்துவம் 
கேள்வியை வைத்து 
பதில் தேட சொல்லும் மார்க்கம் 
ஊர் உறவு சுற்றம் எல்லாம் சூழ்ந்து நின்று 
நீ தனித்த பின் 
என்ன இருக்கிறது எங்கே இருக்கிறாய் யார் நீ 
என்ற கேள்விக்கு
விடை தேட சொல்லும் வலி அது 



மார்க்கம் சொல்லும் வழியை 
பகுத்தறியா மூடர் வாழும் அவனியில் 
சரியான பாதைக்கு 
சரியான பகுத்தறிவாளர் என 
பகுத்தறிய முடியாதோர்க்கு 
மார்க்கம் என்ன 



ஒற்றையானோம் என்றில்லாமல் 
அடுத்தவர்க்கு எடுத்தோதுவதே 
உயர்ந்த பணி என்று 
படைத்தவன் பணித்ததை 
கொண்டு செல்வதே பகுத்தறிவு 



இருட்டில் இருக்கும் பாமரனுக்கு 
ஏகனே கலங்கரை விளக்கு 


இன்னும் வரும்...........!

இந்த சொல்லாடல் இடம் பெற்ற முகப் பக்கத்திக்கு 

10 comments:

  1. எசப்பாட்டு மாதிரி கவிதையிலேயே பேசிக்கிட்டீங்களா? அர்த்தமுள்ள அரட்டை! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே இன்னும் இருக்கு பின்பு தொடரும்

      Delete
  2. கலக்குறிங்க சார்

    ReplyDelete
  3. வாய்ப்பாட்டும் எசப்பாடும் ஏகன் விடைய்தேடி .தொடருங்கள் படிக்கின்றேன் படிக்காத தனிமரம் நான் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இது மூணாப்பு பெயிலும் ரெண்டாப்பு பாஸும் போகிறபோக்கில பேசினது நேசன்

      Delete
  4. இது ஏற்கனவே படிச்சுருக்கேன் , இருந்தாலும் சூப்பர்...!!

    ReplyDelete
  5. மூனாப்பூ படிச்சா புள்ளைக்கு இம்பூட்டுஅறிவா....!!!!!

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!