நேற்றிரவும் ஒரு கனவு
நான் மரணித்து விட்டதாக
என் உடலில் இருந்து
உயிர் வெளியே இழுக்கப்பட்டு
பிய்த்து எறியப்பட்டது
வலியும் கதறலுமாய்
செய்வதறியாது நான்.........!
உற்றமும் சுற்றமும்
கூடி நின்று அழுதார்கள்
விரைவில் மறந்து விடுவார்கள்
அவரவர் அன்பிற்கேற்ப
நாட்களில் வாரங்களில்
மாதங்களில் வருடங்களில்
எனக்கு மட்டும் ...............??
காரியங்கள் ஆகின
கடமைகள் தொடர்ந்தன
குளிப்பாட்டி வெள்ளாடை
அணிவிக்கப் பட்டு கிடத்தப்பட்டேன்
கூடவே பொய்யான
புகழ் மாலைகளும் அதிகப்படியாக
கடைசியில் நடந்தே விட்டது
அந்த நாலு பேரும்......!!!
மரணக் குழிக்குள்
தள்ளியே விட்டனர்
உள்ளே நானும் என் உடலும்
இருட்டு தனிமை வெம்மை
தனித் தனியாக கண்டவை
புதுமையாக ஒன்றாக
ஆனாலும் தாங்க முடியாதவாறும்
மீள முடியாதவாறும்.....!!!!
துர்நாற்றமும் கூடவே
ஊனமும் வழிந்தோடியது
என்னில் இருந்து
எனக்கே சகிக்காதவாறு
எனக்குள்ளே என்னையறியாமல்
நான் வளர்த்த "லார்வாக்கள்"
என்னை தின்று முடிக்க
தீராத பசியுடன்
என்னை சுற்றி.......!!!!!
சட்டென விழித்ததில்
தடுமாறிப் போனேன்
சுற்றும் முற்றும் பார்த்தேன்
எனது அறைதான்
உற்று நோக்கினால் எங்கெங்கினும்
அழகுசாதனங்கள் முத்திரை ஆடைகள்
நவீனத்தால் இறைந்து இருந்தது
நாளைய நிகழ்வுகளுக்கு
திட்டம் தீட்டியபடி
மீண்டும் உறக்கத்தில் நான்.......!!!!!!
கனவும் சொல்லும்சிலநேரத்தில்சில நிஜத்தை.கவிதை அருமை.
ReplyDeleteநன்றி தனிமரம்
Deleteநிஜத்தை நிழல் சொன்ன விதம் மிக அருமை தோழறே
ReplyDelete