Saturday, May 31, 2014

சென்ற பாகத்தில் மந்திரவாதிகளின் பேச்சு, சாதுரியம், சாமர்த்தியம்  பற்றியும் அதில் நாம் விழுவது எப்படி என்று   பார்த்தோம். இந்த பாகத்தில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்துகட்டி நம் காதில் எப்படி பூ சுற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் இந்த மந்திர வேலைகளை மூன்று பிரிவாக பிரித்து நம்மிடம் இருந்து பணமாக பொருளாக ஆட்டையப் போடுவார்கள்.
  1. பேய் பிசாசுகளை அடையாளம் காணுதல்  உறுதிப் படுத்தல்  
  2. அவற்றை நம் இடத்திலிருந்தும் , பாதிக்கப்பட்டவரிடம் இருந்தும் விரட்டுதல் 
  3.  இனி அவைகள் நம்மிடம் அண்டாதவாறு பாதுகாப்பு செய்தல் 

நம் இடத்தில் இருக்கும் பேய் பிசாசுகளை அடையாளம் காண பலமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு முறை, நம் வீட்டிக்கு மந்திரவாதி வருவதற்கு முன்பு வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் ஓன்று  கொடுப்பார். அதில் முக்கியமாக மூன்று வர்ணத்தில் கோழி முட்டை என்று இருக்கும். மூன்று வர்ணத்தில் தான் உலகத்தில் கோழி முட்டை இருக்கின்றது என்பது வேறு விடயம் (பிரவுன், பழுப்பு, நல்ல வெள்ளை என்பன அவை). குறித்த நாளில் மந்திரவாதி நம் வீட்டுக்கு வருகை தந்து, வாங்கிய  வாங்கப் போகின்ற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மந்திரம் சொல்லிவிட்டு அந்த மூன்று முட்டைகளையும் பரிசோதித்து விட்டு அதில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்தெடுத்து வீட்டு முற்றத்தில் அவர் கையால் 2 அடி வரை குழி  தோண்டி மந்திரம் மீண்டும் சொல்லி முட்டையை அவர் கையாலேயே நாம் எல்லோரும் பார்க்க குழியில்  வைத்து மந்திர தண்ணிய அதன் மீது தெளித்து குழியை மூடி விடுவார், பின் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள திடகாத்திரமான ஆணை கூப்பிட்டு அந்த குழியை மீண்டும் தோண்டி அந்த முட்டையை எடுத்து வர சொல்லி விட்டு நாம் கொடுத்த அவர் சிற்றுண்டியில் கவனமாக இருப்பார். தோண்ட சென்றவர் அன்றைய பொழுதுக்கு தோண்டினாலும் மசகு எண்ணை வந்தாலும் வருமே தவிர முட்டை கிடைக்காது. உடனே மந்திரவாதி அந்த இடத்துக்கு வந்து குழியை பரிசோதித்து முட்டையை கொண்டு சென்ற பேயின் பூர்வீகமும் அது ஏன் நம்மை பிடித்தது என்ற வெவரமும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுவார்.

நடந்தது இதுதான், தங்கம் வேலைகளுக்கு  பாவிக்கப்படும் வெண்காரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு தன்மை இருக்கிறது, காற்றுப் பட்டால் திண்மம் ஆகிவிடும், அப்படி அதனை திண்மமாக்கி முட்டை வடிவத்தில் மந்திரவாதி சீவி வைத்துக் கொள்வார் யாருக்கும் தெரியாமல். இந்த முட்டை வெவகாரத்தில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்து எடுத்ததுக்கும் காரணம், இந்த வெண்காரத்தால் செய்யப்பட்ட முட்டை அதே மாதிரி கலரில் இருப்பது ஆகும். உண்மையான கோழி முட்டையையும் இந்த வெண்கார முட்டையையும் மாற்றுவதுதான் மந்திரவாதியின் உழைப்பு தந்திரம். பின் அவர் கையால் வெண்கார முட்டையை குழியுனுள்  வைப்பதும் யாரும் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக தான். அதன் பின் மந்திரத் தண்ணி தெளிப்பதில் தான் விசயமே இருக்கிறது அது மந்திரத் தண்ணி அல்ல. வெறும் பச்சத்தண்ணி தான். வெண்காரத்தில் ஒரு தன்மை உள்ளது, தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடும், விஞ்ஞான முறைப்படி சொல்வதானால், தண்ணீர் பட்டவுடன் எச்சமில்லாமல் தகனமடையும். இப்போ புரிந்திருக்கும் முட்டை எங்கு போயிருக்கும் என்று.

இப்படி ஆயிரம் வழிகளில் பேய் பிசாசுகளை அடையாளம் காணலாம் , அடுத்த பாகத்தில் கண்டு பிடித்த பேய் பிசாசுகளை நம் வீட்டில் இருந்தும் நம்மில் இருந்தும் எப்படி விரட்டுவார்கள் என்று பார்ப்போம்.

தொடரும்..............!

 முந்தைய பாகத்திக்கு : பாகம் 01

Friday, May 30, 2014

சிறந்த மந்திரவாதி ஆவதற்கு முதலில் நா வன்மை அவசியம் ஆகிறது, உலகில் உள்ள எல்லோரையும் ஓன்று கூட்டி ஒருத்தர் விடாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சாஸ்த்திரத்தை நா வன்மையால் கூறமுடியும், "நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்வீர்கள் உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கூறினால் யார்தான் மறுக்க போகிறார்கள். இது சாதாரண மனித மனோன் நிலை. இதுதான் மந்திரவாதிகளின் முதல் அஸ்திரம்.

இரண்டாவது சமயோசிதம், உதாரணம் மந்திரவாதியிடம் நீங்கள் சென்றால் நீங்கள் விபரம் சொல்லுவதற்கு முன்பே அவர் விபரம் சொல்லுவார் இப்படி, "தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்பார், உடனே நாம் ஏதாவது தொலைத்துவிட்டுத்தான் அங்கு போயிருந்தோம் என்றால் உடனே நாம் "கிடைக்குமா? கிடைக்காதா?" என்போம். அவருக்கு நிச்சயம் ஆகிவிடும் நாம் தொலைத்து விட்டுதான் வந்திருக்கிறோம் என்று. ஒரு வேளை நாம் வீட்டில் உள்ளவரின் நோய் சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தால், நாம் யோசிப்போம் நாம் நோய்க்கு  மாந்திரிகம் பார்க்க வந்திருக்கிறோம் இவர் தொலைத்த கதை சொல்கிறார் என்று, இப்போதான் சமயோசிதம் தேவை. நாம் யோசிப்பதை பார்த்ததும் அவர் அடுத்த பிட்டை போடுவார், "வாழ்கையில் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்று, நாம் அவுட். வீட்டில் யாரும் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது மேற்சொன்னவை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் ஏற்ற இறக்கங்ககளுடன் சொல்ல வேண்டும்.

மூன்றாவது வார்த்தை ஜாலங்ககள், சொல் மயக்கம் வரும் படி பேசுவது, இப்போ நம்மிடம் சொல்லுவார், "எல்லாவற்றையும் பார்க்கலாம், முதலில் உங்கள் வீட்டு முற்றத்தில் கால் படாத மண்ணை கைபடாமல் கொண்டுவா" என்பார், சின்ன விசயம்தான் ஆனால் சட்டென்று விளங்காது. அது மட்டுமல்ல, "ஒரு கிடா ஆடு வேண்டும் பலி கொடுக்க, ஆனால் அதன் தாயிக்கு இதற்க்கு பிறகு குட்டி இருக்க கூடாது" என்றெல்லாம் நம்மை சுத்தலில் விடுவார்கள், எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள். ஒன்னும் இல்லை முதலில் சொன்னதற்கு நம் முற்றத்தில் பள்ளம் தோண்டி அதற்குள் இருக்கும் மண்ணை கையில் கிளவுஸ் எதாவது போட்டு எடுக்க வேண்டும், மற்றது தாய் இறந்துவிட்ட ஆட்டு கிடா வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் இதெல்லாம் எதற்கு கேட்கிறார்கள் என்பதுதான் இறைவனுக்கு வெளிச்சம்.

அடுத்த பகுதியில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்து கட்டி எப்படி மாந்திரிகம் செய்கிறார்கள் என்று சொல்கிறேன்.

தொடரும்.......!


Thursday, May 29, 2014

நானாகவும் நீயாகவும்
நாம் நமக்காகவும் நட்பாகவும்
எதுவாகவும் எப்படியாகவும்
சொற்களில் தேனாகவும் வேம்பாகவும்
வேம்பில் மருந்தாகவும் கசப்பாகவும்
செய்கை கூடலாகவும் ஊடலாகவும்
ஊடலில் வெறுப்பாகவும் விருப்பாகவும்

அதுவாக எதுவாக அப்படியாக
என்பது இல்லை செப்படி வித்தையாக
ஏட்டிலும் இல்லை 
யார் பாட்டிலும் இல்லை
எவர் கூற்றிலும் இல்லை
உன் மனதை திறந்தால்
இருக்கும் அன்பு சொல்லுமடி






Monday, May 26, 2014

உயிர் என்றாலும் உறவென்றாலும் 
அன்பில் கட்டுன்ட்டாலும் 
பாசத்தில் பிணைந்திருந்தாலும் 
பிழையொன்று வந்துவிட்டால் 
பொய்யாகிப் போகுமா 
திளைந்திருந்த அந்நாட்கள் 
இதுதானா இவ்வளவுதானா என்று 
சலிப்படைய வெறுப்படைய 
மறுக்கும் நெஞ்சம்அறியாது 
செய்த தவறேன்று புரியாது 
தண்டனைக்கு தப்பவில்லை
சிந்தனை சிறகடிக்கவில்லை
சிந்திப்பதே பறந்து விட்டது குட்டிம்மா 



- என் முகப் பக்கத்தில் இருந்து 

Sunday, May 25, 2014


வளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது 

நம்மைச் சுற்றி கடனும் 
என்னைச் சுற்றி கடலும் இல்லாவிட்டால் 
நடந்தே ஊர் வருவேன் 



கேட்பதை எல்லாம் கொடுப்பவன் அல்ல இறைவன் 
தேவையானதை கொடுப்பவனே இறைவன் 



எதிர்பார்ப்பு இல்லாத அன்பே ஜெயிக்கும் 
ஆகக் குறைந்த்தது ஒரு லைக்காவது



புத்திசாலித்தனம் என்பது ஜட்டி மாதிரி 
யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது



வில்லன் கதாநாயகனை துப்பாக்கியால் சுடுகிறான், குண்டு வருகிறது, 
கதாநாயகன் குனிந்து மறைந்து தப்பினால் அது யாதர்த்த சினிமா 
வருகிற குண்டை பல்லால் கடித்து துப்பினால் அது கமர்ஷியல் சினிமா 



ஆயிரம் யானைகள் ஒரு காட்டில் இருந்தாலும் அந்தக் காட்டிற்கு எந்த சேதாரமும் ஏற்படாது - ஆனால் நாலு மனிதர்கள் காட்டின் ஓரம் குடியேறினால்...............!
ஒரு காட்டினால் ஆயிரம் யானைகளுக்கு அவைகளின் ஆயுள் முழுக்க உணவளிக்க முடியும், மனிதார்களினால்................!



கல்யாண வீடோ கருமாதி வீடோ ஊரே கூடி நின்னாலும் மனம் என்னாவோ விருப்பத்துக்குரியவர் வந்தாரா, வாழ்த்தோ ஆறுதலோ சொன்னாரா என்றுதான் தேடுகிறது 
என்ன மனப் பாங்கு எனப் புரியவில்லை




நான் அதுவாக இல்லவே இல்லை என்று நிருபிப்பதை விட நான் இதுவேதான் என்று புரிய வைப்பது இலகுவானது




தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்



என் முகப்பக்கங்களிருந்து 


புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!